Why this hide and seek ?





படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடகர்கள்: யேசுதாஸ், சித்ரா
இசை: ஏ.அர். ரஹ்மான்
பாடல்: வைரமுத்து

பாடல் தமிழில்:

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா 
நான் கண்ணாடிப் பொருள் போல டா.

அந்த நதியின் கரையை நான் கேட்டேன், 

அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன், 
வான்வெளியைக் கேட்டேன், 
விடையே இல்லை! இறுதியில் உன்னைக் கண்டேன்.
இருதய பூவில் கண்டேன்.

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா 
நான் கண்ணாடிப் பொருள் போல டா.

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?
எனக்கென உணர்சிகள் தனியாக இல்லையா?
நெஞ்சின் அலை உறங்காது.

உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா.
உன் இமை கொண்டு விழி மூட வா 
உன் உடல் தான் என் உடை அல்லவா

பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சம் கூடியே நிறம் மாறவா
என் உயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திடவா

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா 
நான் கண்ணாடிப் பொருள் போல டா.

வான் மழை விழும்போது மலை கொண்டு காத்தாய்.
கண் மழை விழும்போது எதில் என்னைக் காத்தாய்.
பூவின் கண்ணீரை ரசிப்பாய்.
நான் என்ன பெண் இல்லையா என் கண்ணா?
அதை நீ காண கண்ணில்லையா என் கண்ணா?
உன் கனவுகளில் நான் இல்லையா?

தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள்மூச்சிலே உயிர் வீங்குதே
என் உயிர் துடிக்காமலே காப்பது உன்தீண்டலே
உயிர் தர வா

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா 
நான் கண்ணாடிப் பொருள் போல டா.

---

Film: Kandukonden Kandukonden
Singers: Yesudas, Chitra
Music: A.R. Rahman
Lyrics: Vairamuthu

Approximate English translation:

Why this hide and seek?
Am I not a delicate glass object?

I asked the river shore, the wind, the sky (about you whereabouts). 
No answer.
At the end I saw you in my flower heart.

Why this hide and seek?
Am I not a delicate glass object?

Is my heart a playing doll for you?
Don't I have feelings on my own?
The waves of my heart refuses to subside.

Close my mouth with your lips.
Close my vision with your eyelids.
Isn't you body the clothes I wear?

Your colour hasn't changed even after drowning in the ocean of milk (ksheera sagar).
Embrace my heart to change your colour.
Become one with my life.
Let lips remain wet. Become one.

Why this hide and seek?
Am I not a delicate glass object?

When sky rain came, you saved with mountain.
When eye rain (tears) came, with which did you save me?
Didn't you silently enjoy my tears?
Am I not a lady? Aren't you able to see it?
Am I not in your dream?

My mind is wavering daily.
My anklets aren't deaf.
In my every breathe life resents
Your touch saves me.
Come and give me life.

Why this hide and seek?
Am I not a delicate glass object?

This is a romantic, yet devotional to some extent. Happy Janmashtami :) .

Comments

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?