Vaseegara

படம்: மின்னலே
பாடகர்: பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை

பாடல்:
வசிகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்.
அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்.
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே.
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் தானே.

அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய், அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையே தான் எதிர்பார்க்கும்.
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்.
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்.

வசிகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்.
அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்.

தினமும் நீ குளித்ததும் எனைத் தேடி என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை.
திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து என்னை
நீ அணைப்பாயே அது கவிதை.
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாது,
காதலென்னும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாது.

வசிகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்.
அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்.
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே.
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் தானே.

---

Film: Minnale
Singer: Bombay Jayashree
Music: Harris Jeyaraj
Lyrics: Thamarai

Approximate English translation:

Oh Mesmerizer! I just have to lie in your lap so that my heart sweetens, while my longings of previous births get quenched.
I love and breathe because of you.
I long and persist in your thoughts.

Let's get drenched in heavy rains; with fever and love let's sleep under a single blanket.
You win over me with your sweet lies, yet my mind wants it.
You should be with me at house and I should playfully be inside your clothes.

Oh Mesmerizer! I just have to lie in your lap so that my heart sweetens, while my longings of previous births get quenched.

You'd dry your hair in the edge of my saree; that's poem.
You'd embrace me from behind like a thief; that's poem.
I wouldn't be able to tell the time when someone asks.
In the infinity called love, there are no clock times.

Oh Mesmerizer! I just have to lie in your lap so that my heart sweetens, while my longings of previous births get quenched.
I love and breathe because of you.
I long and persist in your thoughts.

Comments

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?