Vathapi Ganapathiye

பாடல்: பாபநாசம் சிவன்
ராகம்: சஹானா
பாடியுள்ளவர்: மஹாராஜபுரம் சந்தானம்

பாடல் வரிகள்:
ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம்
ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம்.

தேவாதி தேவன் தியாகேசன் திருவிளையாடல் செய் திருவாரூர் வளர்;

ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம்
ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம்.

நம்பினபேர் இக பரம் இரண்டிலும் நல் வாழ்வும் இன்பமும் நல்கும்
தும்பி முகப் பெருமானின் அடி தொழும் தொண்டர்கள் வேண்டும் வரம் தருவோனே.

சம்புவுடன் கமலாம்பிகை மகிழும் தனயனே தயாகரனே.
ஜகம் புகழ் கும்பமுனிக்கருள் குமரன் முன் தோன்றிய,
கோமானே ராமதாசன் உள்ளம் வளர்,

ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம்
ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம்.

Comments

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?