Posts

Showing posts from November, 2016

ஜெனரிக் மருந்துகள்

Image
ஜெனரிக் மருந்துகள் பற்றி "சென்னை1 இளைய தலைமுறை" whatsapp குழுவில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதைப்பற்றி நான் பலமுறை கேள்விப்பட்டுளேன். ஒருமுறை அலுவலகத்தில் ஒரு தேநீர் இடைவெளியில் நான் எதார்த்தமாக விலைவாசி ஏற்றத்தைப் பற்றி நொந்துகொண்டிருந்தபோது என் நண்பர் ஒருவர் இதைப்பற்றிக் கூறினார். பின்னர் ஏறக்குறைய இதே தகவலை விஜய் தொலைக்காட்சி நடத்திய, அமீர் கான் தொகுத்து வழங்கிய "சத்யமேவ ஜெயதே" நிகழ்ச்சியில் இதை மீண்டும் காண நேர்ந்தது. நான் கண்டது இந்த வீடியோவின் தமிழாக்கத்தை. ஏனோ இப்பொழுது அது கிடைக்கவில்லை. இந்த வீடியோவை 50வது நிமிடத்தில் இருந்து காணுங்கள். அதில் ஒரு சாதாரண மருந்துக் கடையில் சென்று சில மருந்துகளை ஒருவர் வாங்குகிறார், 2000 + ரூபாய் ஆகின்றது. ஒரு ஜெனரிக் மருந்து கடையில் வாங்குகிறார், அது அவருக்கு 300 + ரூபாய்க்கு கிடைக்கிறது. சுமார் நான்கு மடங்குகளுக்கு மேல் குறைவான விலை. பல கார்பரேட் கம்பனிகளில் மருந்து பில்களை reimburse செய்துகொள்ளலாம். அதனால் இதைப்போன்ற ஜெனரிக் மருந்துக்கடைகளை தேடிப்போகும் சந்தர்ப்பம் அமைவதில்லை. அதனால் நானும் விட்டுவிட்டேன். இப்பொழுது