Posts

Showing posts from January, 2021

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

Image
பாவம் இந்தியர்கள். அவர்கள் அப்பாவிகள். வெள்ளந்திகள். இளகிய மனம் கொண்டவர்கள். தன் எதிரிகளை மன்னிப்பவர்கள். அவர்கள் செய்த தீமைகளை மறந்துவிடுபவர்கள். ஏமாறுவது என்பதும், தனக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் சதிகளை உணராமல் இருப்பது என்பதும் அவர்கள் மரபணுவிலேயே பதிந்துவிட்ட ஒன்று. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். முகமது கோரி கொடுத்த 'இனி போர் தொடுக்க மாட்டேன்' என்ற வாக்குறுதியை நம்பியவர்கள். காப்பாற்றப்படும் நிலைக்கு அப்பால் உள்ளவர்கள். மீறி காப்பாற்றினால் ஏன் காப்பாற்றினாய் என்று சீறுபவர்கள்.  தமிழ் எனக்குப் பிடிக்கும் என்று கூறிய ஒரே காரணத்துக்காக கால்டுவெல்லை புகழ்பவர்கள். "ஒரு தமிழ் மாணவன் இங்குஉறங்குகிறான்" என்று ஜியு போப்பின் கல்லறையில் பதித்திருப்பதாக நம்புபவர்கள். வெள்ளைக்காரர்களின் நயவஞ்சக பிரித்தாளும் சூழ்ச்சியை உணராமல் இருப்பவர்கள். தன்னை அடிமைப்படுத்தியவனையே வணங்குபவர்கள். அவன் அங்கீகாரத்திற்கு ஏங்குபவர்கள். மேற்கத்திய மோகம் உடையவர்கள். நோபல், ஆஸ்கர், செவாலியே ஆகியவைதான் அவர்களுக்கு ஆகப்பெரிய விருதுகள். ஹார்வர்ட், ஆக்ஸ்போர்ட், ஆகிய பல்கலைக்கழகங்களில் படித்தவர்

வரலாறு முக்கியம் அமைச்சரே

Image
பொன்னியின் செல்வன் முதல் சூரரை போற்று வரை: பொன்னியின் செல்வன் என்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்பை பற்றி தமிழ்நாட்டில் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். பலர் அந்த ஐந்து பகுதி நாவலை படித்தும் இருப்பார்கள். இதை திரைப்படமாக இயக்க இயக்குனர் மணிரத்னம் முயற்சி எடுத்துவருகிறார். இது நல்ல விஷயம் தானே என்று கேட்பவர்களுக்கு - எனக்கு இதில் பல சந்தேகங்களும் தயக்கங்களும் உள்ளன. ஒரு இந்து வெறுப்பு குடும்பத்தில் இருக்கும் ஒருவரால் எந்த அளவுக்கு சோழர்களின் சைவப் பற்றையும் சமய நல்லிணக்கத்தையும் காட்சிப்படுத்திவிட முடியும் என்று தெரியவில்லை. இந்திய சினிமா, இன்று, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், சுயசரிதை சார்ந்த படங்களை நேர்மையாக, இயக்குனர்கள் தங்கள் அரசியல் கருத்துக்களை திணிக்காமல், அதீத மசாலா இல்லாமல் இயக்கும் வல்லமையைப் பெற்றுள்ளதா? இல்லையென்றே தோன்றுகிறது. நடிகர் சூர்யா, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, சுயமரியாதை திருமணம் செய்துகொண்டு, பிராமண எதிரிகளுடன் போராடி , விமான கம்பெனியை உருவாக்கி இயக்குவதைப்போல் நடித்த சூரரைப் போற்று படமானது, உண்மையில் பிராமண வகுப்பில் பிறந்து, பிராமண முறை