என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

பாவம் இந்தியர்கள்.

அவர்கள் அப்பாவிகள். வெள்ளந்திகள். இளகிய மனம் கொண்டவர்கள். தன் எதிரிகளை மன்னிப்பவர்கள். அவர்கள் செய்த தீமைகளை மறந்துவிடுபவர்கள். ஏமாறுவது என்பதும், தனக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் சதிகளை உணராமல் இருப்பது என்பதும் அவர்கள் மரபணுவிலேயே பதிந்துவிட்ட ஒன்று. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

முகமது கோரி கொடுத்த 'இனி போர் தொடுக்க மாட்டேன்' என்ற வாக்குறுதியை நம்பியவர்கள். காப்பாற்றப்படும் நிலைக்கு அப்பால் உள்ளவர்கள். மீறி காப்பாற்றினால் ஏன் காப்பாற்றினாய் என்று சீறுபவர்கள். தமிழ் எனக்குப் பிடிக்கும் என்று கூறிய ஒரே காரணத்துக்காக கால்டுவெல்லை புகழ்பவர்கள். "ஒரு தமிழ் மாணவன் இங்குஉறங்குகிறான்" என்று ஜியு போப்பின் கல்லறையில் பதித்திருப்பதாக நம்புபவர்கள். வெள்ளைக்காரர்களின் நயவஞ்சக பிரித்தாளும் சூழ்ச்சியை உணராமல் இருப்பவர்கள். தன்னை அடிமைப்படுத்தியவனையே வணங்குபவர்கள். அவன் அங்கீகாரத்திற்கு ஏங்குபவர்கள். மேற்கத்திய மோகம் உடையவர்கள்.

நோபல், ஆஸ்கர், செவாலியே ஆகியவைதான் அவர்களுக்கு ஆகப்பெரிய விருதுகள். ஹார்வர்ட், ஆக்ஸ்போர்ட், ஆகிய பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் என்ன கூறினாலும் அது தான் அவர்களுக்கு வேத வாக்கு.

சூரரைப் போற்று ஆஸ்கருக்கு செல்கிறது. இதை விட மகிழ்ச்சியளிக்கும் செய்தி அவர்களுக்கு வேறு என்ன இருக்க முடியும்? ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கு பிறகு புளகாங்கிதம் அடைய ஒரு தருணம் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


ஸ்லம் டாக் மில்லியனர் மூலம் மூன்றாம் உலக நாடாக (அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமை தலை விரித்தாடுகிற நாடாக) உலகம் முழுவதும் நிலைபெற்றாகி விட்டது. சூரரைப் போற்று மூலம் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் உள்ள நாடாக நிலைபெற்று நீங்காப் பெருமை அடையப்போகிறார்கள். இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு, மற்றும் பெரிய நிறுவனங்கள் தொடங்க விரும்பும் வெளிநாட்டு தொழில் அதிபர்களுக்கு 'இங்கு தொழில் தொடங்குவதற்குள் டங்குவாரு அறுந்துவிடும்' என்கிற நம்பிக்கையூட்டலை விட வேறு என்ன ஊக்க சக்தி இருக்க முடியும்? நீ முந்தி நான் முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து இந்தியாவில் முதலீடு செய்யப்போகிறார்கள்.

இதெல்லாம் எனக்கு எதற்கு? வெளிநாட்டுக்காரன் கொடுக்கும் கோப்பை தான் அவர்களுக்கு முக்கியம். அட அட அட! சாதிய அடக்குமுறைகளிலிருந்து, எதிர்நீச்சல் போட்டு ஒரு பெரியாரிஸ்டு, எப்படியெல்லாம் தன் பார்ப்பன எதிரிகளை துவம்சம் செய்கிறான். அந்த புளகாங்கிதம் தான் அவர்களுக்கு முக்கியம். [கேப்டன் கோபிநாத் அவர்களின் சுயசரிதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் சூரரைப்போற்று. கேப்டன் கோபிநாத் எந்த சாதிய அடக்குமுறையையும் அனுபவிக்கவில்லை. எந்த பார்ப்பன வில்லன்களையும் எதிர்கொள்ளவில்லை.] இந்த நேர்மையற்ற படத்திற்கு ஆஸ்கர் கிடைக்கும்பொழுது (நல்ல படத்திற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே) சிலிர்க்கிறதா இல்லையா? அந்த சிலிர்ப்பு தான் அவர்களுக்கு முக்கியம். 

அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக்கொள்ளலாம். கடைசியில், நீ ரொம்ப நல்லவன், நீ ரொம்ப திறமைசாலி, உன் தாய்மொழி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, என்று கூறிவிட வேண்டும்.


மேலும், தான் தங்கத்தில் மகுடம் அணிந்திருப்பது அவர்களுக்கு பெருமையில்லை, அக்கா மாலா, கப்ஸி விற்க வந்தவனின் கருப்பு தொப்பியும், சர் பட்டமும் தான் அவர்களுக்குப் பெருமை.

இந்தியாவின் பிம்பம் பற்றியும் அவர்களுக்கு எண்ணம் இல்லை. இந்தியா முன்னேறினால் அதனால் பயன் பெறப்போவது தாங்கள் தான் அந்த சுயநல நோக்கத்திற்காகவாவது  இந்தியாவின் பிம்பத்தை பாழாக்காமல் இருக்கலாம் என்ற புரிதலும் அவர்களுக்கு இல்லை. மிகவும் அப்பாவிகள். அவர்களை ஒரு மீட்டாய் கொடுத்து ஏமாற்றிவிடலாம்.

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்??

Comments

  1. If the people of India starts thinking in wright manner then I'll proudly say Bharat Mata ki Jai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?