வரலாறு முக்கியம் அமைச்சரே

பொன்னியின் செல்வன் முதல் சூரரை போற்று வரை:

பொன்னியின் செல்வன் என்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்பை பற்றி தமிழ்நாட்டில் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். பலர் அந்த ஐந்து பகுதி நாவலை படித்தும் இருப்பார்கள். இதை திரைப்படமாக இயக்க இயக்குனர் மணிரத்னம் முயற்சி எடுத்துவருகிறார். இது நல்ல விஷயம் தானே என்று கேட்பவர்களுக்கு - எனக்கு இதில் பல சந்தேகங்களும் தயக்கங்களும் உள்ளன. ஒரு இந்து வெறுப்பு குடும்பத்தில் இருக்கும் ஒருவரால் எந்த அளவுக்கு சோழர்களின் சைவப் பற்றையும் சமய நல்லிணக்கத்தையும் காட்சிப்படுத்திவிட முடியும் என்று தெரியவில்லை. இந்திய சினிமா, இன்று, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், சுயசரிதை சார்ந்த படங்களை நேர்மையாக, இயக்குனர்கள் தங்கள் அரசியல் கருத்துக்களை திணிக்காமல், அதீத மசாலா இல்லாமல் இயக்கும் வல்லமையைப் பெற்றுள்ளதா? இல்லையென்றே தோன்றுகிறது. நடிகர் சூர்யா, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, சுயமரியாதை திருமணம் செய்துகொண்டு, பிராமண எதிரிகளுடன் போராடி, விமான கம்பெனியை உருவாக்கி இயக்குவதைப்போல் நடித்த சூரரைப் போற்று படமானது, உண்மையில் பிராமண வகுப்பில் பிறந்து, பிராமண முறைப்படி திருமணம் செய்துகொண்டு, தன் கனவை விடாமுயற்சி செய்து நனவாக்கிய  கேப்டன் கோபிநாத் என்பவற்றின் சுயசரிதையை தழுவி எடுக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? (மேலும் விவரங்களுக்கு இதை கிளிக் செய்யவும்)


PC: https://www.theweek.in/news/entertainment/2020/10/26/soorarai-pottru-trailer-becomes-an-instant-hit-among-suriya-fans.html

PC: https://www.thenewsminute.com/article/air-deccan-founder-capt-gopinath-speaks-tnm-about-suriya-s-soorarai-pottru-135041

நேர்மையற்ற இயக்குனர்களின் கைகளில் கதைக்கான கருக்கள் கிடைத்தால் இது போல் தான் நேரும். பொன்னியின் செல்வன் (எ) ராஜராஜ சோழன், மதச்சார்பற்றவராக, கலைகளை ஊக்குவிப்பதற்காக மட்டுமே கோவில்கள் பலவற்றை கட்டியவராக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைக்காவியத்தில் புதிய அவதாரம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அப்படியில்லாமல் மணிரத்னம், கல்கி அவர்களின் காவியத்தில் உள்ளது உள்ளபடியே, தனது படத்தில் காட்சிப்படுத்தினால் அவர் நிச்சயம் பாராட்டுக்குரியவரே.

ஆரிய படையெடுப்பு வாதம் (Aryan Invasion Theory):

அன்று கிமு 1500 முதல் 1200 வரை ஏதோவொரு நாளாக இருக்கலாம், ஆயிரக்கணக்கான ஆரிய ஆண் வீரர்கள், இன்றைய சம்ஸ்க்ருத மொழியின் பழமையான வடிவமான பாலி அல்லது பிராகிருத மொழியை பேசிக்கொண்டு, தென் ரஷ்யாவிலுருந்து ஈரான் வழியாக, கைபர் கணவாய் வழியாக குதிரைகளில் இந்தியாவின் சிந்து சமவெளிக்குள் புகுந்து, அங்கு அமைதியாக சாதிமத பேதமின்றி, சமத்துவத்தோடு வாழ்ந்துவந்த திராவிடர்களை சூத்திரர்கள் என்று கூறி ஒடுக்கி சிந்துசமவெளிக்கு தெற்கே விரட்டினார்கள். இது தான் ஆரிய படையெடுப்பு வாதம்.


தென் இந்தியாவிற்கு திராவிடர்கள் வந்த பிறகும் அவர்களை விடாமல், துரத்திக்கொண்டு ஆரியர்கள் வந்து, (அதாவது தமிழ் பிராமணர்கள் என்கிற தென் ரஷ்யாவிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்தேறியவர்கள் [வந்தேறிகள்]), இன்றளவும் திராவிடர்களை சூத்திரர்கள் என்று மட்டம் தட்டிக்கொண்டு, அவர்களை பெரிய பதவிகளில் இருக்கவிடாமல் தாங்களே பெரிய பதவிகளில் இருந்துகொண்டு இந்தியாவிலேயே பல்லாயிரம் ஆண்டு காலமாக வாழும் திராவிடர்களை ஆள முயற்சிக்கிறார்கள் என்பது தான் ஆரிய-திராவிட வகுப்பு வாதப் புரட்டை மூலதனமாக வைத்து பிழைப்பை நடத்தும் திராவிடக் கட்சிகளின் மூலக்கொள்கை. இவர்களுக்கு, இன்றும் கூட இந்து மதம் என்றால் பிடிக்காது. ராமரைப் பிடிக்காது, கிருஷ்ணரை பிடிக்காது, ராமாயணம் பிடிக்காது, மஹாபாரதம் பிடிக்காது, கந்த சஷ்டி கவசம் பிடிக்காது. இந்த வெறுப்பின் காரணமாக வந்தது தான் கீமாயணம், ஆரிய மாயை, ஆகிய  இந்து மத வெறுப்பு இலக்கியங்கள்.

இன்றளவும் பல மக்கள் பிராமணர்களை இவர்கள் வந்தேறிகள், இவர்கள் தான் ஏதும் அறியாத அப்பாவி திராவிடர்களை சூத்திரர்கள் என்று ஒடுக்கியவர்கள், என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள். இந்த வரலாற்றை கூறியது மிஷனரி வெள்ளைக்காரன் கால்டுவெல். இந்த வெள்ளையன் தான் திராவிடக் கட்சிகளின் God Father. பெரியார் இவன் சொன்ன புரட்டுக்களை தான் கீறல் விழுந்த ஒலிப்பேழையைப் போல் சொல்லிக்கொண்டே தமிழ் சமுதாயத்தை பிராமணர் - பிராமணரல்லாதோர் என்று இரண்டே பிரிவுகளாகப் பிரித்து பிராமணர்களுக்கு எதிராக விஷத்தை விதைத்து வன்முறையைத் தூண்டினார்.

மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். பிராமண வெறுப்பிற்கு காரணம் ஆரிய படையெடுப்பு வாதம் என்கிற ஆதாரமற்ற வாதம். உலகில் பிற நாடுகளில் ஆரிய படையெடுப்பு போன்ற ஒரு வாதத்தை சொல்லியிருந்தால் அதை ஆதாரமில்லாமல் ஏற்றிருக்க மாட்டார்கள். ஆரிய படையெடுப்புக்கு ஆதாரமே இல்லை. தொல்லியல் (archaeology) ஆதாரங்களும் இல்லை, இலக்கிய (literature) ஆதாரங்களும் இல்லை, மரபணு ஆய்வு (genetic) ஆதாரங்களும் இல்லை, மொழியியல் (linguistic) ஆதாரங்களும் இல்லை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை காணவும்.

இந்தியாவிற்கு உள்ளிருந்து வெளியே செல்லுதல்: Out of India Theory

ஆரிய படையெடுப்பு (இந்தியாவிற்கு வெளியிலிருந்த ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்கிற) வாதத்தில் உண்மைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்த அறிஞர்கள் பலருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நினைவுபடுத்திக்கொள்ளவும்:ஆரிய படையெடுப்பின் திசை மேற்கிலிருந்து கிழக்கு. ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த உண்மை என்னவென்றால்: பெருந்திரளான மக்கள் இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கே சென்றிருக்கிறார்கள். இந்தியாவை விட்டு வெளியே சென்றிருக்கிறார்கள். இதைத் தான் ஸ்ரீகாந்த் தலகேரி, இந்த லெக்சரில் விளக்குகிறார் -- மொழியியல் ரீதியாக நிர்மூலமாக்கப்பட்ட ஆரிய படையெடுப்பு வாதப் புரட்டு


வேறொரு நாட்டிற்கு சென்று அங்கே இருக்கும் மக்களிடம் சந்தேகத்திற்கு இடமுள்ள ஒரு வாதத்தை கூறினால் ஆதாரம் கேட்டே துளைத்துவிடுவார்கள். நாமோ ஆரிய படையெடுப்பு வாதத்தை எந்த கேள்விக்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்கிறோம். வரலாற்று தேதிகளை அப்படியே மனப்பாடம் செய்கிறோம். சிவில் சர்விஸஸ் தேர்வுகளுக்கும் இதையே தான் படித்து பயிற்சி பெறுகிறோம். தமிழகத்தின் TNPSC தேர்வுகளில் திராவிட இயக்க வரலாற்றிலிருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டதை நாம் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.
இதைப் பற்றி தெரிந்துகொள்ள இதைப் படிக்கவும்: If You Know About DMK And Its Allies You Can Get Through Tamil Nadu Public Service Commission Group I Exams
திராவிட இயக்கங்களின் அடிப்படை சித்தாந்தமே மிஷனரி வெள்ளையன் கால்டுவெல் நயவஞ்சகமாக போதித்த ஆரிய படையெடுப்பு வாதம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இதுவே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காணப்படும் பிராமண வெறுப்புக்கு காரணம் என்பது கூறாமலே விளங்கும்.

முகலாய மோகம்:

03/09/2020 அன்று தகவல் அறியும் சட்டம் மூலம் இந்த இரண்டு கேள்விகளை NCERTயிடம்  கேட்டனர்,
1) முகலாய மன்னர்களான ஷாஜஹான் மற்றும்  அவுரங்கஜீப் இந்து ஆலயங்களை புனரமைக்க  பொருளுதவி செய்தார்கள் என்று NCERT வரலாற்று புத்தகங்களில் வருவதற்கு ஆதாரம் கொடுக்க முடியுமா?
2) எத்தனை கோவில்களுக்கு ஷாஜஹான் மற்றும்  அவுரங்கஜீப் இவ்வாறு பொருளுதவி செய்தனர் என்று கூற முடியுமா?

இதற்கு NCERTயின் பதில்:

The information is not available on the files of the Department.

பே பே பெப்பே பெப்பே பெப்பே


அட பாவிகளா, இதைத் தானே ஒவ்வொரு மாணவனும் ஒர்ரேண்டு ரெண்டு, ஈர் ரெண்டு நாலு என்று கடம் அடிக்கிறான்? இது தானே அவன் மனதில் ஆழமாக பதிகிறது? இதை வைத்துத்தான் திராவிடக் கொள்கைகளாலும் இடது சாரி கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், 'முகலாயர்கள் மதச்சார்பற்றவர்கள்' என்று உருட்டுகிறார்கள். இதை வைத்துத்தானே  இசுலாமியர்கள் by default (மத இயல்பிலேயே) மதச்சார்பற்றவர்கள் என்று கூறிவருகின்றார்கள்? யாருக்கும் அப்படி free pass கொடுக்கக்கூடாது. எல்லோரும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உட்பட்டவர்களே.

மத்திய கல்வித்துறையில் ஊடுருவி NCERT பாடப்புத்தகத்தை வடிவமைக்கும் அதிகாரம் பெற்றிருக்கும் முகலாய மோகமுள்ள நபர்கள் பல ஆண்டுகளாக ஆதாரமற்ற புகழ்ச்சிகளையும், உண்மைக்குப் புறம்பான 'மதச்சார்பற்ற', 'பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிய' முதலான பிம்பங்களை முகலாயர்களுக்கு கொடுத்துவருகின்றனர்.

பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு அரசியல்:

தை முதல் நாள் பொங்கல் பொங்கும்பொழுதே வருடப்பிறப்பு தை 1ஆ இல்லை சித்திரை 1ஆ? என்ற விவாதமும் துவங்கிவிடும். இந்து மத வெறுப்பாளர்கள், பிராமண வெறுப்பாளர்கள் என்றுமே தை 1 பக்கம்தான். இதற்கு அவர்கள் செய்திருக்கும் ஆய்வுகள், முயற்சிகள் பாராட்டுக்குரியது.


இந்த வலைத்தளம் பலராலும் ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்த வலை பக்கத்தில் பிராமண வெறுப்பு, இந்து மத வெறுப்பு கரைபுரண்டோடுவது தெளிவாகத் தெரிகிறது. இருந்தும் அத்தகைய வெறுப்புக்கு அப்பால் அவர்கள் செய்திருக்கும் ஆராய்ச்சியே மேலோங்கி நிற்கிறது. சித்திரை 1க்கு ஆதரவாக இத்தகைய ஆராய்ச்சி நடக்காதது வருத்தமளிக்கிறது. வெறுப்பாளர்கள் அவர்களின் திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.


ஆளூர் ஷாநவாஸ் அவர் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.

தை 1 பொங்கல். அன்று தான் வருடப்பிறப்பு என்று இந்து வெறுப்பு திராவிட சித்ததாந்தவாதிகள் கூறுகின்றனர் (DMK நிலைப்பாடு).

VCK ஷாநவாஸ், காலாகாலமாக சூரிய வழிபாடு, பசு வழிபாடு செய்து கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் சிக்கல் நிறைந்தது என்கிறார். இந்து சடங்குகள் இருப்பதால் கிறித்துவர்கள், இசுலாமியர்கள் மற்றும் கடவுள் மறுப்பாளர்களால் பங்குகொள்ள முடியவில்லையாம். பொங்கலை தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்று கூறுவோமேயானால் அதில் வழிபாட்டிற்கு இடமில்லை என்கிறார்.


PC: https://www.tourmyindia.com/states/tamilnadu/pongal-festival.html


PC: https://www.netmeds.com/health-library/post/what-s-behind-the-tradition-of-sun-worship

புள்ளிகளை இணைக்கலாமா?
புள்ளி 1: தை 1, அதாவது பொங்கலன்று தான் தமிழ் ஆண்டு பிறப்பு (மாதவிப்பந்தல் வலைதளக்காரர் வருஷப்பிறப்பு என்று கூறக்கூடாது என்கிறார். வருஷம் என்ற சொல்லில் வடமொழிச்சொல் வருகிறதாம்).

புள்ளி 2: தை 1இல், அதாவது ஆண்டு பிறப்பில், அதாவது பொங்கலில் இந்து சமய சடங்குகள் இருக்கக்கூடாதாம், கிறுத்துவர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் கடவுள் மறுப்பாளர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமாம்.

புள்ளி 3: திராவிட இயக்கத்தின் God father கால்டுவெல் ஒரு கிறுத்துவ மிஷனரி.

புள்ளி 4: வெவ்வேறு கூட்டணிகளில் இருந்த சமயங்களில் கூட அடிப்படை சித்தாந்தத்தில் ஒற்றுமை உள்ளவர்கள் DMKவினர் மற்றும் VCKவினர். இன்று ஒரே கூட்டணியில் இருக்கின்றனர். மனுநீதி எரிப்பு, சிறு தெய்வ வழிபாட்டை பெருந்தெய்வ வழிபாடு அழிக்கிறது என்ற பிரச்சாரம், கந்த சஷ்டி கவசம் ஆபாசமானது என்ற பிரச்சாரம், ஆங்காங்கே இந்தத் திட்டமிடலும் இல்லாமல் நடக்கிறது என்று நாம் நினைப்போமேயானால் நம் எதிரி யார்? அவர்களின் பலம் என்ன என்பது தெரியாமல் போய்விடும்.

தை 1 வருடப்பிறப்பாக இருக்கவேண்டும் என்பவர்கள் இந்து மத எதிரிகளாக இருக்கிறார்கள். பொங்கலை மதசார்பற்ற பண்டிகையாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

திராவிட, கிறித்துவ, மற்றும் இசுலாமிய அடிப்படைவாதிகளின் பொது எதிரி இந்துமதம். மேற்கத்திய நாடுகளில் கிறுத்துவர்களும் இசுலாமியர்களும் அடித்துக்கொண்டாலும், சீனாவில் கம்யூனிஸ்டுகளும் இசுலாமியர்களும் எதிரிகள் என்றாலும் இந்தியாவில், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் கூட்டாக இயங்குகின்றனர்.

இவர்களின் ஆழ் மனதில் இருக்கும் இந்து மத வெறுப்புக்கும், பிராமண வெறுப்புக்கும் காரணம் ஆதாரமற்ற ஆரிய படையெடுப்பு வாதம். இதன் நீட்சி தான் திரைத்துறையில் இந்து வெறுப்பையும், பிராமண வெறுப்பையும் கக்கும் படங்களை இயக்கும் சமுத்திரக்கனி, பா ரஞ்சித், சுதா கொங்கரா (சூரரைப் போற்று பற்றிய தலைப்பும் இதை வெளிப்படுத்தத்தான்), அமீர், ஆர்ஜே பாலாஜி முதலானோர் உருவாக்கம்.

இதனால் நான் தெரிவிக்க விரும்பும் கருத்து:

  1. எனக்கு வரலாற்றில் ஆர்வம் இல்லை, நான் சிறு வயதிலிருந்தே வரலாற்றை வெறுத்தவன், என்றெல்லாம் கூறிக்கொண்டு திரியாதீர்கள். உங்களுக்கு ஆர்வம் இல்லையென்றால், உங்கள் மூதாதையர் தான் இந்தியாவில் உள்ள அப்பாவி மக்களை வஞ்சகமாக ஒடுக்கிய நயவஞ்சகர்கள் என்று பரப்பிவிடுவார்கள் அதிகாரத்தில் இருக்கும் இடதுசாரி திராவிட அடிப்படைவாத கல்வியாளர்கள். இவர்களின் அதிகாரம் அளப்பரியது. TNPSC கேள்வித்தாள் வரை அவர்களின் அதிகாரம் பாயும். இந்து விரோத, பிராமண விரோத, திராவிட ஆதரவு syllabusஐ கரைத்துக்குடித்து தேர்ச்சிபெற்றவர்களுக்குத் தான் வேலை என்று அவர்களால் மாற்ற முடியும். நம் முன்னோர்களுக்கு வரலாற்றில் ஆர்வம் இருந்திருந்தால், ஆரிய படையெடுப்பு வாதத்தை என்றோ நிர்மூலமாக்கியிருப்பார்கள். நம் துன்பங்களுக்கு காரணம் நம் வரலாற்றின் மீது நமக்கு ஆர்வமில்லாமல் போனது தான்.
  2. தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி வரலாற்று பாடப்புத்தகத்தில் இருக்கும் தகவல்களுக்கு ஆதார ஆவணங்கள் இருக்கிறதா? பாடநூலில் இருக்கும் வரலாறு உண்மை தானா? என்று தெரிந்துகொள்ளுங்கள். கண்மூடித்தனமாக வரலாற்று பாட நூல்களில் கொடுத்திருப்பது அனைத்தும் உண்மை என்று அப்பாவித்தனமாக நம்பாதீர்கள்.
  3. வரலாற்று அறிவுக்கு பாடநூலை மட்டுமே நம்பியிருக்காதீர்கள். அக்பர் நாமா, பாபர் நாமா, தொல்லியல் ஆராய்ச்சி பேப்பர்களையும், மரபணு ஆராய்ச்சி பேப்பர்களை வாசிக்கவும். அமர் சித்ர கதா போன்ற முயற்சிகளை ஆதரிக்கவும்.
  4. ஜனநாயகத்தில் ஒரு எழுதப்படாத விதி - அழும் குழந்தைக்கு பால். ஐயோ! அடிக்கிறார்களே, கொல்லுகிறார்களே, ஒடுக்குகிறார்களே, குரல்வளையை நெரிக்கிறார்களே என்று லபோ திபோ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். மக்களை பார்க்கவைக்க வேண்டும். உங்களுக்கு ஒரு மாற்றம் வரவேண்டுமானால் நீங்கள் இருப்பது மற்றவர்களுக்கு தெரியவேண்டும், உங்கள் கருத்துக்கள் மற்றவர்களுக்கு தெரியவேண்டும். மெளனமாக இருந்தால் எந்த காரியமும் நடக்காது. அரசாங்கம் நீங்கள் நிம்மதியாக எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறீர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடும். வாயைத் திறக்க வேண்டும். பேச வேண்டும். ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்க எந்த செலவும் ஆகாது. தகவல் அறியும் சட்டம் மூலம் கேள்விகள் கேட்பதும் சுலபமே. உங்கள் குழந்தை படிக்கும் வகுப்பில் பிற குழந்தைகளின் பெற்றோர்களை தொடர்புகொள்வது எளிதுதான் (இப்பொழுதெல்லாம் whatsapp குரூப் கூட பல பள்ளிகளில் வைத்திருக்கிறார்கள்). பிற குழந்தைகளின் பெற்றறோருக்கு நம் கருத்தை கூறி ஆதரவை பெறலாம். கூட்டு முயற்சிசெய்து பாடநூல்களை திருத்த அழுத்தம் கொடுக்கலாம். இவைகளை எல்லாம் செய்துதான் ஆகவேண்டும். மந்திரத்திலெல்லாம் மாங்காய் விழாது.

முடிவா இன்னா தான்டா சொல்ற ன்னு நீங்க கேட்டா -- என் ஒரே வாக்கிய பதில் "வரலாறு மிக முக்கியம் அமைச்சரே".

Comments

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?