புதிய அனுபவம்

என் கல்யாணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாரத் மேட்ரிமோனியில் ப்ரொஃபைலைப் பார்த்து அதிலேயே 'உங்களை அழைக்கலாமா' என்று கேட்டு அனுமதி பெற்று, பேசி, வீட்டிற்கு  அழைத்து, பேசினார்கள். "வீட்டுக்குப் போய்ட்டு டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்" என்றார்கள். இரண்டு நாட்கள் ஆகியும் எந்த பதிலும் வராததால் நாங்களே ஃபோன் செய்தோம். "ஒரு வாரத்தில் சொல்கிறோம்" என்றனர். ஆனால் ஒரு நாளிலேயே Sms வந்தது, "we are not proceeding. all the best" என்று.

அழகாக வேறு இருந்தாள். என்னைப் பற்றி எனக்கே உயர்ந்த கருத்தெல்லாம் இல்லை. Over weight, முதிர்ந்த தோற்றமுள்ள முகம்...

வருத்தம் தான் ஆனால் ஒரு எதிர் விளைவு ஏற்பட்டிருக்கிறது. முன்னர் என் விருப்பங்களையெல்லாம் எனக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தேன். இப்பொழுது அதையும் marital Conditions இல் சேர்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.

> குழந்தையை தத்தெடுக்கும் விருப்பமுள்ளவர் மட்டும்.
> 2 (அ) 3 வயது வித்தியாசம் உள்ளவர் மட்டும்.
> தன் பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள நினைப்பவர்கள். என் பெற்றோர்களை நான் பார்த்துக் கொள்ள ஆட்சேபம் தெரிவிக்காதவர்கள்.
> Philosophy இல் நாட்டம் உள்ளவர்கள்.
> வேலைக்குச் செல்பவர்.
> வீட்டின் பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் பங்கெடுக்க நினைப்பவர்.

இது எல்லாவற்றையும் மீறி வருபவர்கள் மட்டும் வரட்டும்.

நான் பல நிபந்தனைகளை சமரசமின்றி விதிக்கும் பெண்களை மிகவும் மதிக்கிறேன், பெரிதும் பாராட்டுகிறேன். சமரசமற்ற தன்மை அவர்களின் எதிர்காலம் பற்றிய தெளிவான சிந்தனையையும் தொலைநோக்குப் பார்வையையும் காட்டுகிறது.

நானும் அவ்வாறு இருக்கவே விரும்புகிறேன்.

Comments

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Raleigh NC business visit

Brahmin devotees of the Tamil deity Murugan