நான் எழுத நினைத்த கடிதம் - என் நண்பனின் தந்தைக்கு

அன்புள்ள பாலு மாமாவிற்கு,

நான் இங்கு நலம். உங்கள் நலம் அறிய ஆவல். கிஷோர் எப்படி இருக்கிறான்? அவனை நினைக்கும் பொழுது என் சத்தியமங்கல வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. சத்தியமங்கலத்தில் எனக்கு கிடைத்த முதல் நண்பன் கிஷோர் தான். அவனுக்கு இப்படி ஒரு விபத்து நடந்திறுகாமல் இருந்திருந்தால் மிக நன்றாக இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது. அவன் குணமடைந்து வருகிறான் என்று கேள்விப்பட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் பூரண குணம் அடைய கடவுளிடம் வேண்டுகிறேன்.

அவனிடம் இருந்த இசை ஆர்வம் இன்று நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கும். நாங்கள் ஒண்பதாம் வகுப்பு படிக்கும்போதே பல ராகங்களுக்கு ஆரோஹனம் அவ்ரோஹனம் எலாம் சொல்லுவான். எனக்கு இசை ஆர்வம் வர அவன் ஒரு முக்கிய காரணம். இப்பொழுதோ பெங்களூரில் நடைபெறும் அணைத்து இலவச கச்சேரிகளுக்கும் சென்றுவிடுகிறேன்.

கிஷோரை ஒரு மிருதங்க வித்வானாக பார்க்க வேண்டும் என்பது என் பல நாள் கனவு. அந்த கனவின் தாக்கமாகவோ என்னவோ எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. அவன் பூரண குணம் அடைந்தவுடன் அவனை ஒரு நல்ல பாகவதரிடம் சேர்க்க வேண்டும் என்பதே அந்த எண்ணம்.

வீ .. மாமாவின் மகன் ஒருவருக்கு இசை கலைஞயர்கள் பலரை தெரிந்திருக்க கூடும் என்று என் பெரியப்பா (வெங்குட்டு) சொன்னார். அவரை நாடி எப்படியாவது ஒரு நல்ல கலைஞரிடம் கிஷோரை சேர்க்கலாமா?

என் அக்கா மகனும் பெங்களூரில் ஒரு புகழ் பெற்ற மிருதங்க பாகவதரிடம் பயில்கிறான். நான் கூட அவரை ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். இது விஷயம் அவரையும் அணுகலாம் என்பது என் யோசனை.

கிஷோர் உடல் நலம் குறித்தும், மிருதங்கம் பயிலும் யோசனை குறித்தும், மாமி, திவ்யா அக்கா மற்றும் குடும்பத்தினர் நலம் குறித்தும் பதில் கடிதம் போடவும்.

இப்படிக்கு,
பாலாஜி.

Comments

Post a Comment

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?