Aadhar haters create panic

ஆதார் வெறுப்பாளர்கள் சிறிது காலமாகவே பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு ஒரு உதாரணம்

ஆதார் எனும் ஆபத்து

(1) எழுதிய ராஜேந்திரன் சொல்கிறார்:
quote
இத்தனை தனிநபர் விபரங்களை துல்லியமாக கூறியபின், மீதம் உள்ள 12 எண்ணெயும், CVV எண்ணையும், மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்ணை பகிரும் படி கூறுவார், அதை பகிர்ந்த மறுநொடி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்ற பட்டிருக்கும். சீனியர் சிட்டிசன், பெண்களை குறிவைத்து இந்த வடிவ தாக்குதல் நடைபெறும்.
unquote 

யார் கேட்டாலும் இந்தத் தகவல்களை கொடுக்கவேண்டாம் என்று கூறி  தினம் ஒரு குறுஞ்செய்தியும், ஈமெயிலும் வருகிறது வங்கியிலிருந்து. அதை மீறி இந்தத் தகவல்களைப் பகிர்பவர்கள், மன்னிக்கவும், ஏமாறுவதற்கென்றே பிறந்தவர்கள் என்று கூறுவதைத் தவிர வேறு என்ன கூற? அப்படி இருப்பவர்கள் நம் அம்மா, அப்பா, அக்கா, அண்ணனாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கு புரியவைப்பது நம் கடமை.


(2) அவர் மேலும் ஒரு ஏமாற்றும் வாய்ப்பை sim-swap என்கிற பகுதியில் பகிர்கிறார் இவ்வாறு:
quote
உண்மையில் என்ன நடக்கிறது என்றால், அந்த நபர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று சிம் கார்டு தொலைந்து விட்டது என்றும் வேறு சிம் கார்டு வேண்டும் என்றும் கூறுவார். புது சிம் கார்டு பெற பழைய சிம் எண்ணை வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அனுப்பும் படி கூறுவார். அனுப்பியவுடன் பழைய சிம் கார்டை பிளாக் செய்து விட்டு புது சிம் கார்டு விநியோகிக்க படும்.

இப்பொழுது வாடிக்கையாளரின் ஆதார் தகவல்கள் மற்றும் அதில் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுடைய  சிம்  இரண்டையும் வைத்து கொண்டு அந்த நபரின் வங்கி கணக்கை UPI/BHIM ஆப் ஹேக் செய்யலாம் Source

unquote 

அவர் கொடுத்துள்ள sourceக்கு சென்று பார்த்தால் இவ்வாறு இருக்கிறது.
quote 
During investigations, it was found that Vijay's computer had been used for viewing account details of all the nine customers who were targeted. He was posted in Ghazipur district at an Axis Bank branch and had quit his job after his name cropped up after which he joined Bandhan Bank in Azamgarh district.
unquote 

இது முழுக்க முழுக்க வங்கி ஊழியர் செய்த திருட்டு. Professional ethics என்று ஒன்று இருந்தால், மருத்துவரோ, வக்கீலோ, வங்கி ஊழியரோ, மென்பொருள் பொறியாளரோ தங்களிடம் இருக்கும் customer தகவல்களை தரமாட்டார்கள், தவறான முறையில் தாங்களும் பிரயோகம் செய்ய மாட்டார்கள். நம் ரகசியங்களையும், தகவல்களையும் ஒருவரிடம் நம்பிக் கூறுவது அவர் professional ethics படி ஒழுகுவார் என்கிற நம்பிக்கையில். ஆங்காங்கு மீறல்கள் நடப்பது இயல்பு தான். அதற்குத் தான் சட்டம் இருக்கிறது. கைது செய்யும், செய்திருக்கிறது. இவர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. "அரசாங்கம் எப்படி ரோடு போடலாம்? ரோடு போட்டால் வண்டிகள் போகுமே? விபத்துக்கள் நிகழுமே? எல்லாம் மத்திய அரசின் சதி!" என்று கூறுவது போல் இருக்கிறது.

போலி சிம் கார்டு என்ற பகுதியில் இவ்வாறு ராஜேந்திரன் கூறுகிறார்:
quote 
...ஆதாரை பயன்படுத்தி, தொடர்ந்து நடந்து வரும் மோசடிகளுக்கு, அரசிடம் பதில் இல்லை என்பதே, முகத்தில் அறையும் உண்மை.
unquote 

இந்த குற்றச்சாட்டை ஏற்கிறேன். ஆதாரில் மேம்படுத்தப்பட வேண்டியன நிறைய இருக்கின்றன.ரோமாபுரி ஒரு நாளில் கட்டப்பட்டது அல்ல. சிலருக்கு பண மதிப்பிழப்பு, GST, ஆதார்  எல்லாவற்றையும் இன்னும் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். இவர்கள் கூறுவது நியாயமற்றது அல்ல, ஆனால் திட்டமிட்டால் திட்டமிட்டுக்கொண்டே இருக்கவேண்டியது தான். நான் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்தில் ஒருவன் இருந்தான். அவன் ME மெக்கானிக்கல் படித்திருக்கிறான். நல்ல அறிவாளி. ஆனால் C / C++ எல்லாம் தெரியாது. நிறுவனத்தில் 3 வாரங்கள் இவற்றை படிக்க கால அவகாசம் கொடுத்தார்கள். அவனும் நன்கு படித்தான். ஆனால் அவனுக்கு தன்னம்பிக்கை வரவில்லை. அவன் நினைத்தான் c / c++ ஐ கரைத்துக் குடித்துவிட்டுத் தான் எல்லாரும் வேலை செய்கிறார்கள் என்று. நான் சொன்னேன், "தம்பி, C ஐ முழுமையாகக் கற்றுக்கொண்ட பிறகு தான் வேலை செய்யத் தொடங்க வேண்டும் என்றால் Dennis Ritchie ஆல் கூட ஒரு துரும்பைக் கூட அசைத்திருக்க முடியாது. எல்லோரும் போகிற போக்கில் தான் கற்கிறார்கள்" என்றேன். அந்த சிலர் எதிர்பார்ப்பது c / c++ ஐ ஐயம் திரிபு அற தெரிந்து கொண்டு தான் hello world புரோக்ராம் எழுத வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பாகும். ஒரு விஷயத்தில் தவறு இருப்பின் சுட்டிக் காட்டுவது நம் கடமை. ஜனநாயக நாட்டில், கிழி கிழி என்று கடும் விமர்சனங்கள் மூலம் கிழித்தெடுப்பதும் நம் கடமை தான். ஆனால் ஆதாரில் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றி இவர்கள் மூச்சு கூட விடாதது எவ்வளவு தூரம் நம் அறிவை விரிவுபடுத்தும் என்று தெரியவில்லை.

Plugging LPG subsidy leaks leads to Rs 21,000 crore savings
Aadhaar helped identify 80,000 'ghost' teachers in higher education institutions

இவைகளைப்போல் ஆதாரால் ஏற்பட்ட நன்மைகள் அளப்பறியது.

அவர் சொல்கிறார்:
quote 
தனி நபர் உரிமை (Right to Privacy) அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, அது பிரிக்க முடியாதது  என்பதை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், நமது தனி நபர் விபரங்களை, தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து, அவற்றை, அந்த நிறுவனங்கள் தங்கள் சொந்த லாபத்துக்காக பயன்படுத்துவது எத்தனை பெரிய மோசடி ?
unquote 

உண்மைதான். ஆனால் தனி நபர் உரிமை மீறல்களை தடுத்துவிட்டால் ஆதார் சீரமைந்துவிடும். 

மீண்டும் சொல்கிறேன்.
>> ரோமாபுரி ஒரு நாளில் கட்டப்பட்டது அல்ல. தொடர்ந்து ஆதாரில் உள்ள குறைகளை களைய வேண்டும்.
>> எல்லா கோணங்களிலிருந்தும் யோசிக்கிறேன், யாருக்கும் ஒரு இன்னல் கூட வராமல் நடைமுறைப்படுத்துகிறேன், C / C++ ஐ அக்கு வேறு ஆணி வேறு பிரித்து ஆழ்ந்த புலமை வந்த பிறகு தான் பிள்ளையார் சுழியே போடுவேன் என்று நினைத்தால் எதையும் நடைமுறைப் படுத்த முடியாது.

ஆதலால், ஆதார் பூச்சாண்டிகள் உங்களை பயமுறுத்துவார்கள். ஆங்காங்கே கோளாறுகள் இருந்தாலும், ஏழை மற்றும் நடுத்தர வர்க மக்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்பது என் பார்வை. 

உயர்திரு சவுக்கு அவர்கள் மேல்தட்டு மக்களின் ஷூவில் இருந்து (அணிந்துகொண்டு) கூறுகிறார் என்பது என் பார்வை.

Comments

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?