ஜெனரிக் மருந்துகள்

ஜெனரிக் மருந்துகள் பற்றி "சென்னை1 இளைய தலைமுறை" whatsapp குழுவில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதைப்பற்றி நான் பலமுறை கேள்விப்பட்டுளேன். ஒருமுறை அலுவலகத்தில் ஒரு தேநீர் இடைவெளியில் நான் எதார்த்தமாக விலைவாசி ஏற்றத்தைப் பற்றி நொந்துகொண்டிருந்தபோது என் நண்பர் ஒருவர் இதைப்பற்றிக் கூறினார். பின்னர் ஏறக்குறைய இதே தகவலை விஜய் தொலைக்காட்சி நடத்திய, அமீர் கான் தொகுத்து வழங்கிய "சத்யமேவ ஜெயதே" நிகழ்ச்சியில் இதை மீண்டும் காண நேர்ந்தது.


நான் கண்டது இந்த வீடியோவின் தமிழாக்கத்தை. ஏனோ இப்பொழுது அது கிடைக்கவில்லை. இந்த வீடியோவை 50வது நிமிடத்தில் இருந்து காணுங்கள். அதில் ஒரு சாதாரண மருந்துக் கடையில் சென்று சில மருந்துகளை ஒருவர் வாங்குகிறார், 2000 + ரூபாய் ஆகின்றது. ஒரு ஜெனரிக் மருந்து கடையில் வாங்குகிறார், அது அவருக்கு 300 + ரூபாய்க்கு கிடைக்கிறது. சுமார் நான்கு மடங்குகளுக்கு மேல் குறைவான விலை.

பல கார்பரேட் கம்பனிகளில் மருந்து பில்களை reimburse செய்துகொள்ளலாம். அதனால் இதைப்போன்ற ஜெனரிக் மருந்துக்கடைகளை தேடிப்போகும் சந்தர்ப்பம் அமைவதில்லை. அதனால் நானும் விட்டுவிட்டேன். இப்பொழுது இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேவை வந்துள்ளது. பல மக்கள் விலை உயர்ந்த மருந்துக்களை வாங்க முடியாமல் தவிப்பதைப் பார்கிறேன். இப்பொழுதுதான் ஞானோதயம் வருகிறதா என்றால் எல்லாம் ஒரு சோம்பேறித்தனம் தான்...

Whatsappஇல் இதைப்பற்றி படித்தவுடன், நம்மிடம் தான் internet இருக்கிறதே, மதியம் தூங்கிவிட்டோம், இப்பொழுது தூக்கம் பிடிக்க மணி இரண்டாகும், உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்று இந்த ஜெனரிக் மருந்துகளைப்பற்றி அடிப்படைத் தகவல்களை அறிய முயன்றேன். அவற்றை உங்களிடம் பகிர்கிறேன்.

எப்படி ஜெனரிக் மருந்துகளை குறைந்த விலையில் கொடுக்க முடிகிறது:
பார்மஸி கம்பனிகள் பல கோடி டாலர்கள் செலவு செய்து மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள், பல சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படிக் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த மருந்தை எளிதில் கொடுத்துவிட முடியாது அல்லவா. அதனால் அந்த மருந்துகள் மீது காப்புரிமை பெற்றுவிடுவார்கள். அந்த உரிமையின் மூலம் வேறு எந்த கம்பனியும் அந்த மருந்துகளை இவர்களின் அனுமதியின்றி அல்லது உரிமைத்தொகை செலுத்தாமல் உலகில் எங்கும் விற்க முடியாது. இதில் நல்ல விஷயம், இந்தக் காப்புரிமைக்கு ஒரு கால அளவு இருக்கிறது. அதற்கு மேல் இவர்கள் யாரையும் தடை செய்ய முடியாது.

இந்த ஜெனரிக் மருந்துகள் காப்புரிமை முடிந்துபோன மருந்துகளை தயாரித்து விற்கப்படும் மருந்துகள்.

ஜெனரிக் மருந்துகள் பற்றிய விக்கிபீடியா கட்டுரைப் படி :

Generic drugs are usually sold for significantly lower prices than their branded equivalents and at lower profit margins. One reason for this is that competition increases among producers when a drug is no longer protected by patents. Generic companies incur fewer costs in creating generic drugs—only the cost of manufacturing, without the costs of drug discovery and drug development—and are therefore able to maintain profitability at a lower price. The prices are often low enough for users in less-prosperous countries to afford them. For example, Thailand has imported millions of doses of a generic version of the blood-thinning drug Plavix (used to help prevent heart attacks) from India, the leading manufacturer of generic drugs, at a cost of 3 US cents per dose.

ஒரு எடுத்துக்காட்டு:
நான் மாதந்தோறும் என் தந்தையின் உயர் ரத்த அழுத்தத்துக்காக வாங்கும் மருந்து Aten 25. இதன் விலை Rs. 30/-. புகைப்படம் கீழே.



இதன் இணையான ஜெனரிக் மருந்தின் விலை Rs. ~6. சுமார் ஐந்து மடங்கு விலை குறைவு. படம் கீழே.



Source: http://janaushadhi.gov.in/list_of_medicines.html

இந்த ஜெனரிக் மருந்து 50 mg. ஆனால் எனக்குத் தேவையான 25 mg யும் சற்றேறக்குறைய இதே விலை தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

மேல் கொடுக்கப்பட்ட லிங்க்கை சொடுக்கி முழு விவரம் பெற வேண்டுகிறேன்.

மத்திய அரசு இந்த ஜெனரிக் மருந்து கடைகளை எடுத்து நடத்த ஊக்குவிக்கறது என்று தோன்றுகிறது.




இதை நல்லெண்ணம் கொண்டோர் எடுத்து நடத்த வேண்டும். தவிர இதை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

நன்றி.

Comments

  1. ஜெனரிக் மருந்துகள் நமக்குக்கிடைத்த வரமே! அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஜெனரிக் மருந்துகள் பற்றிய இன்னும் பல அவசியமான தகவல்களை goo.gl/oz1y8v ஐ கிளிக் செய்தும் நாம் தெரிந்து கொள்ள முடியும்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?