என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

பாவம் இந்தியர்கள். அவர்கள் அப்பாவிகள். வெள்ளந்திகள். இளகிய மனம் கொண்டவர்கள். தன் எதிரிகளை மன்னிப்பவர்கள். அவர்கள் செய்த தீமைகளை மறந்துவிடுபவர்கள். ஏமாறுவது என்பதும், தனக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் சதிகளை உணராமல் இருப்பது என்பதும் அவர்கள் மரபணுவிலேயே பதிந்துவிட்ட ஒன்று. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். முகமது கோரி கொடுத்த 'இனி போர் தொடுக்க மாட்டேன்' என்ற வாக்குறுதியை நம்பியவர்கள். காப்பாற்றப்படும் நிலைக்கு அப்பால் உள்ளவர்கள். மீறி காப்பாற்றினால் ஏன் காப்பாற்றினாய் என்று சீறுபவர்கள். தமிழ் எனக்குப் பிடிக்கும் என்று கூறிய ஒரே காரணத்துக்காக கால்டுவெல்லை புகழ்பவர்கள். "ஒரு தமிழ் மாணவன் இங்குஉறங்குகிறான்" என்று ஜியு போப்பின் கல்லறையில் பதித்திருப்பதாக நம்புபவர்கள். வெள்ளைக்காரர்களின் நயவஞ்சக பிரித்தாளும் சூழ்ச்சியை உணராமல் இருப்பவர்கள். தன்னை அடிமைப்படுத்தியவனையே வணங்குபவர்கள். அவன் அங்கீகாரத்திற்கு ஏங்குபவர்கள். மேற்கத்திய மோகம் உடையவர்கள். நோபல், ஆஸ்கர், செவாலியே ஆகியவைதான் அவர்களுக்கு ஆகப்பெரிய விருதுகள். ஹார்வர்ட், ஆக்ஸ்போர்ட், ஆக...