நான் எழுத நினைத்த கடிதம் - என் நண்பனின் தந்தைக்கு
அன்புள்ள பாலு மாமாவிற்கு , நான் இங்கு நலம் . உங்கள் நலம் அறிய ஆவல் . கிஷோர் எப்படி இருக்கிறான் ? அவனை நினைக்கும் பொழுது என் சத்தியமங்கல வாழ்க்கை நினைவுக்கு வருகிறது . சத்தியமங்கலத்தில் எனக்கு கிடைத்த முதல் நண்பன் கிஷோர் தான் . அவனுக்கு இப்படி ஒரு விபத்து நடந்திறுகாமல் இருந்திருந்தால் மிக நன்றாக இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது . அவன் குணமடைந்து வருகிறான் என்று கேள்விப்பட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது . மேலும் பூரண குணம் அடைய கடவுளிடம் வேண்டுகிறேன் . அவனிடம் இருந்த இசை ஆர்வம் இன்று நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கும் . நாங்கள் ஒண்பதாம் வகுப்பு படிக்கும்போதே பல ராகங்களுக்கு ஆரோஹனம் அவ்ரோஹனம் எலாம் சொல்லுவான் . எனக்கு இசை ஆர்வம் வர அவன் ஒரு முக்கிய காரணம் . இப்பொழுதோ பெங்களூரில் நடைபெறும் அணைத்து இலவச கச்சேரிகளுக்கும் சென்றுவிடுகிறேன் . கிஷோரை ஒரு மிருதங்க வித்வானாக பார்க்க வேண்டும் என்பது என் பல நாள் கனவு . அந்த கனவின் தாக்கமாகவோ என்னவோ எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது . அவன் பூரண குணம் அடைந்தவுடன்...