Aadhar haters create panic
ஆதார் வெறுப்பாளர்கள் சிறிது காலமாகவே பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு ஒரு உதாரணம் ஆதார் எனும் ஆபத்து (1) எழுதிய ராஜேந்திரன் சொல்கிறார்: quote இத்தனை தனிநபர் விபரங்களை துல்லியமாக கூறியபின், மீதம் உள்ள 12 எண்ணெயும், CVV எண்ணையும், மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்ணை பகிரும் படி கூறுவார், அதை பகிர்ந்த மறுநொடி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்ற பட்டிருக்கும். சீனியர் சிட்டிசன், பெண்களை குறிவைத்து இந்த வடிவ தாக்குதல் நடைபெறும். unquote யார் கேட்டாலும் இந்தத் தகவல்களை கொடுக்கவேண்டாம் என்று கூறி தினம் ஒரு குறுஞ்செய்தியும், ஈமெயிலும் வருகிறது வங்கியிலிருந்து. அதை மீறி இந்தத் தகவல்களைப் பகிர்பவர்கள், மன்னிக்கவும், ஏமாறுவதற்கென்றே பிறந்தவர்கள் என்று கூறுவதைத் தவிர வேறு என்ன கூற? அப்படி இருப்பவர்கள் நம் அம்மா, அப்பா, அக்கா, அண்ணனாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கு புரியவைப்பது நம் கடமை. (2) அவர் மேலும் ஒரு ஏமாற்றும் வாய்ப்பை sim-swap என்கிற பகுதியில் பகிர்கிறார் இவ்வாறு: quote உண்மையில் என்ன நடக்கிறது என்றால், அந்த நபர் வாடிக்கைய...