பசுமை இந்தியா
கிருத்திகா அவள் மாணவன் ஒருவனுக்கு 'பசுமை இந்தியா' என்ற தலைப்பில் கட்டுரை எழுத உதவி செய்ய வேண்டுமாம். நான் பலமுறை அவளிடம் விவசாயத்தை பற்றி மொக்கை போடுவதுண்டு. அதனால் தானோ என்னவோ எனக்கு விவசாயத்தைப் பற்றி தெரியும் என்று நினைத்துக்கொண்டாள் போல் இருக்கிறது. அது உண்மை அல்ல. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. எங்கள் குடும்பம் விவசாயத்தை விட்டு இரு தலைமுறைகள் ஆகின்றன. இந்த நிலைமையில் எனக்கு விவசாயம் பற்றிய அனுபவ அறிவுக்கு வாய்ப்பே இல்லை. சிறிய தோட்டத்தில் புற்களை பிடிங்கியுள்ளேன் boys high school pt periodஇல். பின்னர், வீட்டில் செடிகள் வளர்த்திருக்கிறோம். அதற்கு பாத்தி கட்டியிருக்கிறேன். தண்ணீர் விட்டிருக்கிறேன். உரத்திற்கு கல்லுப்பு போட்டிருக்கிறேன். அவ்வளவு தான். ஆனால் சில வருடங்களாக பல கட்டுரைகளை படித்திருக்கிறேன். எல்லா விஷயங்களும் ஆழமாகப் பதியவில்லை என்றாலும் ஒரு மிகச் சிறிய கட்டுரை எழுதும் அளவு மனதில் சில விஷயங்கள் பதிந்திருக்கின்றன. அவை கோவையாக (பேச்சுத் தமிழில் 'கோர்வையாக') இல்லாமல் அங்கும் இங்குமாக இருக்கின்றன. மனதில் தோன்றுவதையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டு...