உமாச்சி காப்பாத்து, நெஜமாவே ;)
என் வீட்டிற்கு என் நண்பன் வந்திருந்தான். அப்பொழுது என் தங்கையின் ஒன்றரை வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டு, குட்டிப் பாப்பாவோட, தல எங்க இருக்கு ? காது எங்க இருக்கு ? மூக்கு எங்க இருக்கு ? பல்லு எங்க இருக்கு ? வளையல் எங்க இருக்கு ? தொப்ப எங்க இருக்கு ? கொலுசு எங்க இருக்கு ? பூன எப்பிடி கத்தும் ? நாயி எப்பிடி கத்தும் ? மாடு எப்பிடி கத்தும் ? பாட்டி எப்பிடி ஏப்பம் விட்டா ? என்று ஒவ்வொரு கேள்வியாக கேட்க, அவளும் காட்டிக்கொண்டும், சொல்லிக்கொண்டும் வந்தாள். பின்னர் "உமாச்சி காப்பாத்துன்னு வேண்டிக்கோ" , என்று கூறினேன். அவளும் பூஜை அறைக்குச் சென்று இருகரம் கூப்பி நமஸ்காரம் செய்தாள். அப்பொழுது என் நண்பன், "நா இதுவரைக்கும் 'உமாச்சி'ன்னு யாரும் சாமிய சொன்னத பாத்ததில்ல, 'உமாச்சி'ன்னா என்ன பாலு?" என்று கேட்டான். அது ஒரு நல்ல கேள்வி. அந்த சமயத்தில் உமாச்சி ...